கொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும், புதிதாக முடக்கப்படும் பிரதேசங்கள்!

கொழும்பு மாவட்டத்தில் தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் டாம் வீதி, கெசல்வத்தை, (வாழைத்தோட்டம்) மருதானை பொலிஸ் பிரிவுகள் என்பன நாளை காலை 5.00 மணிமுதல் விடுவிக்கப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு, கொம்பனித் வீதி பொலிஸ் பிரிவின் வேகந்த கிராம சேவகர் பிரிவு, ஹுணுப்பிட்டிய ஆகிய பகுதிகளும் நாளைக் காலை 5.00 மணிமுதல் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் மயூர பிளேஸ், பொரளை பொலிஸ் பிரிவின் கல்கனதோட்டம், காளிப்புள்ளைவத்தை, வெலம்பிட்டிய பொலிஸ் பிரிவின் லக்க்ஷன செவன வீடமைப்புத் திட்டம் ஆகியன விடுவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொழும்பில் சில பகுதிகள் நாளைக் காலை 5.00 மணிமுதல் புதிதாக முடக்கப்படுகின்றன.
இதன்படி கெசல்வத்தை (வாழைத்தோட்டம்) பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு கிராம சேகவர் பிரிவு, புதுக்கடை கிழக்கு மேற்கு கிராம சேகவர் பிரிவு ஆகியன முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாளை (28) அக்குறணையில் இயந்திரனியல் உபகரண கழிவுகளை சேகரிக்கும் நேரம்
Next articleமுஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து அதிக PCR பரிசோதனைகள் ஏன்?