இலங்கைக்கான வர்த்தக, விசேட விமான சேவைகள் டிசெம்பர் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்

இலங்கைக்கான அட்டவனைப்படுத்தப்பட்ட விமான சேவைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உலகெங்குமுள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைகளுக்கு இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Previous articleஇன்றைய தங்க விலை (12-12-2020) சனிக்கிழமை
Next articleமுஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதி செய்ய இலங்கை அரசு கொரோனாவை பயன்படுத்துகிறது! – சர்வதேச மன்னிப்புச் சபை