மூதூரில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நபருக்கு 20 வருட கடூழிய சிறை!

திருகோணமலை மூதூர் பெரிய வெளி பகுதியின் பாடசாலையொன்றில் கடந்த 2017ஆம் ஆண்டு 8 வயது நிரம்பிய மாணவிகளுடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் செவ்வாய்கிழமை (2) தீர்ப்பளித்தார்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 6 சந்தேக நபர்களை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் இருந்து திரவமும் பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த திரவமும்  சந்தேக நபர்களின் இரத்த மாதிரியைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி கிடைக்கப்பெற்ற டிஎன்ஏ அறிக்கையின் படி ஐந்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டு ஒருவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டத்தரணி கலீமா பயிஸ் இந்த வழக்குக்கு எதிராக முன்னிலையானார்.

99 சதவீதம் குறித்த சந்தேக நபர் குற்றச் செயலை புரிந்துள்ளார் என அரச சட்டத்தரணி கலீமா பயிஸ் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார்.

அனைத்து சாட்சியங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் ஒருவரே என தீர்ப்பளித்தது.

அத்துடன், 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும், 10 இலட்சம் நட்ட ஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அத்தொகையினை செலுத்ததவறின் மேலும் 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையுடன் 20,000 ரூபா தண்டம் பணம் செலுத்து வேண்டும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Previous articleகொரோனா நோயாளியின் மோசமான செயல் – துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு
Next articleஇன்றைய தங்க விலை (03-12-2020) வியாழக்கிழமை