கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.

கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலஹா பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் மனைவியுடன் கொலன்னாவையில் உள்ள மகளின் வீட்டிற்கு கடந்த 26ஆம் திகதி சென்றுள்ளார்.

பின்னர் 27ஆம் திகதி தனி வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வரும்போது அவர் சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் அவர் மனைவியின் உதவியுடன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Previous articleசடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை! – M.H.A ஹலீம்
Next articleஜனாசாக்களை தகனம் செய்வதற்கு எதிராக முன்னாள் அமைச்சரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா.