என்டிஜென் டெஸ்ட் கிட் பிரதான அரச வைத்தியசாலைகளில்.

கொவிட் 19 தொற்றாளர்களை உடனடியாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் அனைத்து முன்னணி வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பீ.சி.ஆர் பரிசோதனைக்கு மேலதிகமாக உடனடி என்டிபாடி எனப்படும் சோதனைகளை நடத்த தனியார் வைத்தியசாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நடத்தப்படும் பரிசோதனை நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டொக்டர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க இதனை கூறினார்.

´இதுவரை பிரதான அரச வைத்தியசாலைகளுக்கு ´ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்´ வழங்கப்பட்டுள்ளது. அவற்றை மருத்துவர்கள் பயன்படுத்தலாம். மேலும், அரசாங்க மேற்பார்வையின் கீழ் தனியார் வைத்தியசாலைகளுக்கும் பீ.சி.ஆர் சோதனைக்கு மேலதிகமாக என்டிஜென் பரிசோதனையை முன்னெடுக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு நோயாளிக்கு தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்தால், அவர்கள் அதை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.´

இதேவேளை, ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட் விலை தொடர்பிலும் டொக்டர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெளிவுப்படுத்தினார்.

´ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்´ மருந்துக்கு இப்போது 1200 ரூபா வரையில் செலவாகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டுக்கு மேலதிகமாக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மற்றுமொரு பரிசோதனை மாதிரி கருவி. அதனையும் பாவிக்க பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதிலும் போட்டி தன்மை ஏற்படவுடன் விலை குறைவடையலாம். முதற்கட்டமாக நான்கு இலட்சம் பெறுமதியான ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட் கிடைக்கவுள்ளது. அடுத்தாக நான்கு இலட்சம் பெறுமதியான ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட் கிடைக்கவுள்ளது. தற்போது ஐம்பதாயிரம் பெறுமதியான ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட் கையிருப்பில் உள்ளது. நான்கு இலட்சம் பெறுமதியான பரிசோதனை கருவிகளும் கிடைத்தால் அது போதுமானதாக இருக்கும்´ என்றார்.

Previous article‘கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய கொரோனா அலையாக மாறலாம்’: திஸ்ஸ விதாரண எச்சரிக்கை
Next articleவேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்