மீண்டும் வாகன சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளி முறை

வாகன சாரதிகளின் அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது.

சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான ஒரு வழி முறையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்படும் விபத்துக்களுக்கு அவர்களின் அனுமதி பத்திரத்தில் 24 புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.

அவ்வாறு 24 முதல் புள்ளிகள் குறைக்கப்பட்டு பூச்சியத்தை எட்டும் பட்சத்தில் சாரதிகளின் அனுமதிபத்திரம் இரத்தாகும்.

இவ்வாறு புள்ளிகள் வழங்கும் நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூறினார்.

Read:  மீண்டும் ரணில் !!