12 வயது சிறுமி துஷ்பிரயோகம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

புத்தல, ஒக்கம்பிடிய பொலிஸ் பிரிவை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும் அவருக்கு உதவி புரிந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒக்கம்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் மகள் எனவும் சந்தேகநபரின் மனைவியால் யோகட் ஒன்று வாங்கிக் கொடுக்கப்பட்டு அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிடிய பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு