சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனூடாக குறித்த பகுதிகளில் மீண்டும் அவதானமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட துறைமுகத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்தும் கட்டுப்பாடின்றி தொற்றாளர்கள் பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் திறக்கப்படும் சந்தர்ப்பங்களில் சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றதாக என்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleசட்டவிரோத மணல் அகழ்வு சுற்றி வளைக்க சென்ற போலீசாரை மோதி தப்பித்த டிப்பர் சாரதி… ஒரு கான்ஸ்டபிள் பலி.
Next articleமஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜை பலி!