மீண்டும் பழைய இடத்தில் அலவதுகொடை போலீஸ் நிலையம்

அலவதுகோடை நகரில் இருந்த போலீஸ் நிலையம், பல வருடங்களுக்கு முன் மீள் திருத்தம் நடவடிக்கை காரணமாக வேறு ஒரு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டு இருந்தது.

புதுப்பிக்கப்பட்ட பழைய போலீஸ் நிலையம் நேற்று (26) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

எமது நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பிலும், சிலபோது ஏற்படும் அசாதாரண நிலைகளின் போதும் மற்றும் எந்தவித சூழ்நிலையிலும் அர்ப்பணத்துடன் நாட்டுக்காக இலங்கை பொலிஸ் பிரிவினர் புரியும் சேவை மிகவும் உச்சநிலையில் மதிக்க வேண்டியதாகும்”

அலவதுகொடை பழைய பொலிஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் உப அதிபர் லலித் பதிநாயக்க அவர்களது தலைமையில் திறப்புவிழா இடம்பெற்றது.

அதன்போது அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் செனிடைஸர் கொள்கலன் ஒன்றையும் பொலிஸ் நிலையத்திற்கு அன்பளிப்பு செய்தார்.

மேலும் மாவதுபொல பரணகம நந்தரத தேரர், அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி அபேசிங்ஹ மற்றும் அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சன்ஜீவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read:  அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு - நிமல் லன்சா