கொரோனாவினால் மரணிப்போருக்கான சவப்பெட்டிகளை, அவரது குடும்பமே வழங்க வேண்டும் – பவித்திரா பிடிவாதம்

கொவிட்-19 காரணமாக மரணிப்போருக்கான சவப்பெட்டிகள் அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் -25- அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொவிட்டினால் உயிரிழக்கும் நபர் ஒருவருக்கான சவப்பெட்டியை தெரிவு செய்வது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனவும் அதற்கான செலவினை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், சவப்பெட்டிக்கான செலவினை செய்ய முடியாத குடும்பத்தினர் அது குறித்து அறிவித்தால் யாரேனும் கொடையாளர்களிடம் அனுசரணை பெற்றுக்கொள்ள தாம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக உயிரிழக்கும் அனைத்து சடலங்களும் இலங்கையில் தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசஹ்ரானை வழிநடத்திய குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது, 1930 இல் சிங்களம் – முஸ்லிம் மோதல் நடந்தது – மைத்திரி
Next articleமுதல் கட்டமாக கொரோனா தடுப்பூசியை 4.2 மில்லியன் பேருக்கு பெற்றுக்கொள்ள முடியும் – பவித்ரா