கோவிட் -19 சிகிச்சை மருத்துவமனை தாதிமார் அமைதி போராட்டம்.

மாத்தறை மாவட்ட கோவிட் -19 சிகிச்சை மருத்துவமனையில்  தாதிமார்கள் இன்று அமைதி போராட்டம் ஒன்றை நடத்தினர்.

தாதுமார்கள் தங்கள் கடமைகளைச் செய்ய சரியான வசதிகள் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.  

தங்களுக்கு போதிய போக்குவரத்து, சுகாதாரம், உணவு, உறைவிடம் வசதி கிடைக்கவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 200 கோவிட் நோயாளிகள் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தங்களுக்கு தேவையான கடமைகளைச் செய்ய போதுமான ஊழியர்கள் இல்லை என்றார்.

Previous articleசிவப்பு எச்சரிக்கை – புயலாக மாறுகிறது தாழமுக்கம்… வளிமண்டலவியல் திணைக்களம்.
Next articleபெருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா.