இரு பிரதேசங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம அதிகாரிகள் பிரிவுகளுக்கு, இன்று (24) முதல், போக்குவரத்துக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்குறணையில், சமீபத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் காரணமாகவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பிரகாரம், அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளுகொஹொதென்னை பிரதேசத்தில் ஒரு பகுதியிலும், தெழும்புகஹவத்தை ஆகிய கிராம அதிகாரி பிரிவுகளுக்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அக்குறணை பிரதேச செயலாளர் இநதிகா குமாரி அபேசிங்ஹ தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும்மக்கள், சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் இப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.kurana lock down curfew bulugohatenna thelumbugaha watte

மடவளநியூஸ்

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்) –

**Daily-2+tax when your phone balance available

VIAமடவளநியூஸ்
SOURCEமொஹொமட் ஆஸிக்
Previous articleஹேசா MP யின் குற்றச்சாட்டுக்கு, அலி சப்ரியின் அதிரடி பதில்
Next articleமத்திய மாகாண கொவிட் நோயாளர்கள் தொடர்பில் விளக்கம்