மின்னேரியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!

இன்று(24) நள்ளிரவு மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமுற்று பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதி உட்பட சிலர் உயிரிழந்துள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற அரச பேரூந்தும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Read:  மீண்டும் ரணில் !!