கிரிக்கெட் விளையாடியதால் மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வைத்தியர்

பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற மாணவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவனின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரணில் வர வாய்ப்பு.
Next articleஇன்றைய தங்க விலை (23-11-2020) திங்கட்கிழமை