அக்குறணை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோள்…

அடுத்தவர்களுக்கு பிரயோசனப்படும் எனின் இத் தகவலினை ஷேர் பண்ணவும்

அஸ்ஸலாமு அலைக்கும்‌ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

தற்போது எமது பிரதேசத்தில்‌ கொவிட்‌19 வைரஸ்‌ நோயினால்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ தொகை (34) முப்பத்தி நான்காக உயர்வடைந்துள்ளது.

எனவே எமது மஸ்ஜித்‌ நிருவாகத்தின்‌ கீழுள்ள அக்குறனைக்கு வெளியே சென்று படிக்கூடிய அனைத்து மாணவர்களும்‌, குறிப்பாக
இந்நோயினால்‌ பாதிக்கப்பட்ட, தொடர்புடைய குடும்பத்தைச்‌ சேர்ந்த மாணவர்களும்‌ 23.11.2020 திங்கட்கிழமை முதல்‌ ஒரு வாரகாலம்‌ பாடசாலைகளுக்குச்‌ செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு 21.11.2020 ஆம்‌ திகதி அக்குறனை பிரதேச செயலாளர்‌ அவர்கள்‌ ஜம்‌இய்யாவிற்கு அனுப்பிய கடிதத்தில்‌ வேண்டிக்‌ கொண்டார்‌.

மேற்படி இவ்வறிவித்தலை பெற்றார்‌ பாதுகாவலர்கள்‌ கவனத்திற்‌ கொண்ட செயற்படுமாறு அன்பாய்‌ வேண்டிக்‌ கொள்ளப் படுகின்றீரகள்‌.

இப்படிக்கு அஷ்-ஸெய்க் U.L. Marzook
Akurana Jamiyyathul Ulama

குறிப்பு :

மேற்குறிப்பிடப்பட்ட விடயம்‌ பின்வரும்‌ மஹல்லாக்களில்‌ மாத்திரம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌.

1. பத்ரியீன் (7ம் கட்டை) Badriyyeen J/M (7″ mile post)

2. மீக்காத் (குருகோடை சந்தி) Meeqath J/M (Kurugoda junction)

3. மொஹியத்தீன் (குருகோடை) Mohideen J/M (Kurugoda)

4. சாலிஹீன் (8ம்கட்டை) Saliheen (8″ mile post)

5. தாய்ப்பள்ளி (புளுகோஹாதென்ன) Grand Mosque (Bulugahatenna)

6. அஹ்சன் (புளுகோஹாதென்ன) Ahsan J/M (Bulugahatenna)

7. அரபா (கசாவத்த) Arafa J/M (Kasawatta)

8. தக்வா (தெலும்புகஹவத்த) Taqwa J/M (Telumbugahawatta)

9. மஸ்ஜிதுல் நூர் (பல்லேவெளிகெடிய) Masjidun Noor Palleweliketiya

10. அர்கம் (பல்லேவெளிகெடிய) Arkam (palleweliketiya)

11. சின்னப்பள்ளி (புளுகோஹாதென்ன) Sinnappalli (Bulugahatenna)

12. சபா (போசங்க) Safa (Bosanga)

13. அகபா (நீரல்ல) Aqaba J/M (Neeralla)

14. மல்வானஹின்ன ஜும்மா பள்ளி Malwanahinna J/M

மேலதிக தகவல்களுக்காக பின்வரும்‌ இலக்கங்களுடன்‌ தொடர்பை ஏற்படுத்தவும்‌
0773786538 / 0775375904 / 0773848580

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page