கொழும்பு, கம்பஹாவில் பின்வரும் இடங்களில் நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் -தளபதி

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்களில் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, பொரளை, வெல்லம்பிட்டி, பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல மற்றும் கடவத்தை பகுதிகளிலும் நாளை காலை 5 மணிக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனாவினால் இன்று சனிக்கிழமை 9 பேர் மரணம் – மொத்தம் 83 ஆக அதிகரிப்பு (விபரங்கள் இணைப்பு)
Next articleசூறாவளி ஏற்படும் வாய்ப்பு – வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை