கொரோனாவினால் இன்று சனிக்கிழமை 9 பேர் மரணம் – மொத்தம் 83 ஆக அதிகரிப்பு (விபரங்கள் இணைப்பு)

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று சனிக்கிழமை, 21 ஆம் திகதி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

அனைத்து 9 இறப்புகளும் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

தேசிய மருத்துவமனையில் 4 பேர் இறந்துள்ளனர், 2 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் இறந்துள்ளனர். அந்தந்த வீடுகளில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று இறந்தவர்களில் 48 வயது பெண். திடீரென கோவிட் தொடர்பான மாரடைப்பு காரணமாக அவர் இறந்தார்.

கொழும்பு 2 – ஆண் வயது 57 (கொவிட்19 + நிமோனியா)

வெல்லம்பிட்டிய – ஆண் வயது 65 (கோவிட்19 + நீரிழிவு + உயர் குருதி )

தெமடகொடை – ஆண் வயது 89 (கொவிட்19 + நிமோனியா)

கொழும்பு 10 – பெண் வயது 48 (கொவிட்19 + மாரடைப்பு)

கொழும்பு 10 – ஆண் 72 (கோவிட்19 + நீரிழிவு + உயர் குருதி)

கொழும்பு 13 – பெண் வயது 69 (கொவிட்19 + மாரடைப்பு)

வெள்ளவத்தை – ஆண் 76 (கொவிட்19 + நிமோனியா + பேக்டீரியா தாக்கம்)

வெல்லம்பிட்டிய – பெண் வயது 75 (கொவிட்19 + நிமோனியா)

பெண் வயது 75 (கொவிட்19 + நிமோனியா + இரத்தம் விஷம் )