இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து வந்த 14 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2745 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 670 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Previous articleபாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல்
Next articleதாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி இணையத்தளமூடாக மோசடி