போகம்பறை சிறைச்சாலை விவகாரம்… தப்பியோட முயன்ற போது உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா .

கண்டி – போகம்பறை பழைய சிறைச்சாலையில், நேற்று  முன்தினம் தப்பியோட முயன்றபோது உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில், விளக்கமறியல் உத்தரவின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றுமுன்தினம் காலை கண்டி – போகம்பறை பழைய சிறைச்சாலையில் இருந்து தப்பியோட மேற்கொண்ட முயற்சியின் போது, ஒரு கைதி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய கைதி புதன்கிழமை பிற்பகல், மத்திய மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெறுவதுடன் இதன்போது தப்பியோட முயன்ற மேலும் இருவர் சிறை வளாகத்துக்குள்ளேயே சிறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇஸ்லாமியர்களை அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் மன்னாரில் அனுமதிக்க முடியாது
Next articleகெளரவ கதீப்மார்களுக்கான வேண்டுகோள் – ACJU