கண்டி நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம்

கண்டியின் சில பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சிறியளவிலான நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புவியியலாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 9.27 அளவில் கண்டியின் ஹாரகம, அனுரக, திகன ஆகிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது 30 செக்கன்கள் வரை நீடித்தது.

இந்த அதிர்வு பல்லேகலையில் அமைந்துள்ள நில நடுக்க கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ளது. இது ரிச்டரில் இரண்டு அளவீடுகளைப் பதிவு செய்திருந்ததாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

Previous articleவீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லவும்..
Next articleஇன்றைய தங்க விலை (19-11-2020) வியாழக்கிழமை