பொலிவியாவில் ஆங்காங்கே மீட்கப்பட்ட 420 சடலங்கள் மீட்பு – அதிர்ச்சியில் மக்கள்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் வீதிகள் மற்றும் வீடுகளிலிருந்து 420 சடலங்கள் ஐந்து நாட்களில்  மீட்கப்பட்டுள்ளதாகவும்,  சடலங்களில்  85 சதவீதமானவை கொரோனா வைரஸ் இருப்பதாக நம்பப்படுவதாக பொலிவியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 15-20 முதல் கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மட்டும் மொத்தம் 191 சடலங்களும், 141 சடலங்கள் பாஸ் நகரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறை பணிப்பாளார் தெரிவித்துள்ளார்.

பொலிவியா நாட்டின் மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பொலிவியாவில் சாண்டா குரூஸ் பெருநகரப் பகுதியே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பொலிவியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 60,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 2,218 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சடலங்களில் 85 சதவிகிதம் ” கொவிட் -19 தொற்றுள்ளதாக பரிசோதனகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் இவ்வாறு இறந்தவர்கள் கொரோனா  அறிகுறிகளுடன் கூடிய தொற்றாளர்கள் எனவும் எனவே அவை சந்தேகத்திற்குரியவையாக பதிவு செய்யப்படும்” என்று தேசிய காவல்துறை பணிப்பாளார் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ளவர்கள் “பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர், அதாவது ஒரு நோய் அல்லது வன்முறை காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய தொற்றுநோயியல் அலுவலகத்தின்படி, கொச்சபம்பா மற்றும் லா பாஸின் மேற்கு பகுதிகள் கொரோனா வைரஸ் நிகழ்வுகளில் “மிக விரைவான அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளது.

தடயவியல் புலனாய்வு நிறுவனத்தின் பணிப்பாளார்  ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை வைத்தியசாலைகளுக்கு வெளியே மீட்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட சடலங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ளன.

பொலிவிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஒரு விஞ்ஞான குழுவினர் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை தொற்றுநோயால் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கடந்த நவம்பரில் அங்கு வெடித்த அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பொலிவியா முயல்கிறது, தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீதி ஆர்ப்பாட்டங்களால் ஜனாதிபதி ஈவோ மோரலெஸ் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters