வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லவும்..

வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனை வரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வெளியில் ஏதாவது வியாபார நிலையங்களில் சேவை பெற்றுக் கொள்ளும் போது அங்குள்ள லொக் புத்தகத்தில் தகவல் பதிவு செய்வதற்காக வீட்டிலிருந்து பேனா ஒன் றைக் கொண்டு செல்லுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து வர்த்தக நிலையங்களும் தற்போது புதிதாக ஒருவர் செல்லும் போது தகவல்களைப் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள மையினால் அஜித் ரோஹன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வீட்டிலிருந்து பேனா ஒன்றைக் கொண்டு செல்வது இலகுவாக இருக்கும் அத்தோடு சுகாதார பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price