நாட்டில் இன்று 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் இன்று (15-11-2020) மேலும்  160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று இரவு 09 மணிவரை 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 உயர்வடைந்துள்ளதுடன்  5,734 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றையதினம் நாட்டில் மேலும் 171 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 11,495 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 562 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இன்று ஐவர் உயிரிழந்ததையடுத்து  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  58 ஆக உயர்வடைந்துள்ளது. 

Previous articleகொழும்பைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்குப் பலி! (Total 58)
Next articleதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.