ரயில் சேவைகளை வழமைபோன்று முன்னெடுக்க தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பகுதியளவில் முடக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் யாவும், வழமைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், நாளை (16.11.2020)முதல் ரயில் சேவைகளை வழமைப் போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Previous articleகொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடம் மற்றும் தனியார் பஸ் நிலையம் நாளை திறக்கப்படுவதாக அறிவிப்பு
Next articleஜனாஸா – மல்வனாஹின்ன, S.H.M.நஸீம்