கொரோணாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியுமா? நிபுணர் குழு அறிக்கை அடுத்த வாரம்

கொரோணாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பான  நிபுணர் குழு அறிக்கை அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் பவித்திரா வண்ணியாரச்சிக்கு வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி சில தரப்பு முன்வைத்த கோரிக்கையை அடுத்து சுகாதார அமைச்சு கொரோணாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பான விடயத்தை   நிபுணர் குழுவிடம் கையளித்துள்ளதாக கூறிய அவர் அடுத்த வாரம் இது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சர் பவித்திரா வண்ணியாரச்சிக்கு வழங்கப்படும் என தான் நம்புவதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

VIAமடவளநியூஸ்