ஜனாஸா விவகாரத்தை அமைச்சரவைக்கு நான் கொண்டு வந்ததில் எவ்வித தவறும் இல்லை! -நீதியமைச்சர் அலி சப்ரி

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை (ஜனாஸாக்கள்) அடக்கம் செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்துக்கு நானே கொண்டு வந்தேன் என நீதியமமைச்சர் அலி சப்ரி சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு முஸ்லிம் என்ற அடிப்படையில் இந்த விடயத்தை அமைச்சரவையின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன் இதில் எவ்வித தவறும் இல்லை.

மேலும் கொரோனவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களின் உடல்களையும் உயிரிழந்தவர்களின் உறவினர்களின் விருப்பத்தின் பேரில் அடக்கவோ தகனம் செய்யவோ இடமளிக்கமளிக்க வேண்டும். இதனையே உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்துள்ளது. இதனை முழு உலமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அந்தந்த சமூகத்துக்குள் நாம் இருந்து பார்க்கும்போதுதான் அவர்களின் துயரத்தையும் அழுகையையும் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleமுஸ்லிம்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கான பதிலை, தாமதிக்காமல் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் – ஹஸன் அலி
Next articleபோகாம்பரை சிறையால் கண்டி நகருக்கு ஆபத்து வர வாய்ப்பு