ஜெரு­ச­லேமில் பாரிய நிலக்கீழ் மயானம் நிர்­மாணம்

இஸ்­ரேலில்  இறந்­த­வர்­களின் பூத­வு­டல்­களை  நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான  மயான வச­தியை பெறு­வ­தி­லுள்ள நெருக்­க­டிக்கு தீர்வு காணும் முக­மாக ஜெரு­ச­லேமில் நிலத்தின் கீழ் 160 அடி ஆழத்தில் 230,000  சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்யக்கூடிய வச­தி­யுடன் பாரிய மயா­ன­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த மயா­னத்­திற்கு மின்தூக்கி உப­க­ர­ணங்கள் மூலம்  பிர­வே­சிக்க முடியும்.

அத்­துடன் அங்கு  சட­லங்­களை  நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்கு கொண்டு செல்­வ­தற்­கான  வாகன வச­திகள் ஏற்படுத்தப்படுவதுடன் அவ்­வி­டத்தை கலைக்­கூ­ட­மாக மாற்றும் வகையில் அருங்­காட்­சி­ய­க­மொன்றும் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்த மயா­னத்­தி­லான நல்லடக்க செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters