ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்குமூலம் திரிவுபடுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில், இணையங்களில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிய வழங்கிய வாக்குமூலம் எனக் கூறி திரிவுபடுத்தப்பட்ட பதிவுகள் சமூக வலைத்தளங்கள், சில இணையத் தளங்களில் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்ட பதிவுகள் தொடர்பில் சி.ஐ.டி. விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இன்று (13) சி.ஐ.டி.க்கு கிடைக்கப்பெற்ற எழுத்து மூல முறைப்பாட்டை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறிப்பாக ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்குமூலம் எனக் கூறி திரிவுபடுத்தப்பட்ட விடயங்களை சமூக மயபப்டுத்தி, அதனை மையப்படுத்திய செய்திகள் ஊடாக விசாரணை நிறுவனம் மீது பொது மக்களின் குரோதத்தை தூண்டும் விதமாகவோ அல்லது குற்றவியல் நீதி தொடர்பிலான சந்தேகங்களை தோற்றுவிக்கவோ திட்டமிட்ட குழுவொன்று முயற்சிக்கின்றதா என இவ்விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

    Previous articleகொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்
    Next articleநிறுவனமொன்று 50 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை மறைத்து வைத்திருக்கின்றது