இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைப்பு

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆண்களுக்கான இருபதுக்கு-20 உலகக் கிண்ண  கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது.

இருபதுக்கு-20 உலகக் கிண்ண போட்டிகள் அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் – நவம்பரில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இன்று கூடிய ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளது. 

அதன் படி, 

ஐ.சி.சி இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இல் ஒக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறுவதுடன், இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் திகதி நடக்கும் என்றும், 2022 ஆம் ஆண்டு இருபதுக்கு- 20 உலகக் கிண்ணம் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியாவில் ஒக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26 ஆம் திகதி நடைபெறும் எனவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.