நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்,  இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் இன்று இதுவரை கொரோனா தொற்று காரணமாக ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளது. 

Previous articleஇலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 45 ஆவது மரணம் பதிவானது.
Next articleஜனாஸா – அஸ்வர் (பொலன்னறுவை மசூமியா ஹோட்டல்)