கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி! முஸ்லிம்கள் செரிவாக வாழும் பகுதியை தெரிவு செய்ய உத்தரவு!

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அமைச்சரவை அமைச்சர்  ஒருவர் இதனை  மடவளை நியுசுக்கு சற்றுமுன்னர்  உறுதிப்படுத்தினார்.

நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம்கள் செரிவாக வாழும் ஒரு பகுதியை தெரிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்காக  மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டதாக  இன்றைய 09.11.2020 அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த சிரேஷ்ட அமைச்சர் மேலும் மடவளை நியுசுக்கு சற்றுமுன்னர் உறுதிபடத்தெரிவித்தார்.

SOURCEமடவளநியூஸ்
Previous articleதனிப்பட்ட சுதந்திரங்களுக்காக இஸ்லாமிய சட்டங்களை தளர்த்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது
Next articleஜனாஸா விடயம் சம்பந்தமாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு