தனிப்பட்ட சுதந்திரங்களுக்காக இஸ்லாமிய சட்டங்களை தளர்த்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது

ஐக்கிய அரபு இராச்சியம் நாட்டின் இஸ்லாமிய தனியார் சட்டங்களில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதன்படி மதுபானத்திற்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதோடு திருமணம் ஆகாதவர்கள் ஒன்றாக வாழ்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளது. அதேபோன்று கௌரவக் கொலைக்கு கடும் தண்டனை வழங்குவதற்கு அந்நாட்டு சட்டத்துறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு அவமதிப்பு செய்ததாக இடம்பெறும் இவ்வாறான கொலைகளுக்கு வழக்கமாக கடுமையற்ற தண்டனைகளே வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான கொலைகள் இனி ஒரு கொலைக் குற்றமாக கருதப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய அரசு குறிப்பிட்டுள்ளது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page