3ஆம் தவணைக்காக 23ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்! (முழு விபரம்)

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக   செயற்படுத்தப்பட்டு  எதிர்வரும் 23 ஆம் திகதி  மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.  

மேலும்  நாடுதழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்  ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில்  இன்று (09)  இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் அனைத்து பாடசாலைகளும் இன்று 9 ஆம் திகதி மீள திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.  ஆனால் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாடசாலைகளை மீளத் திறப்பது சாத்தியமற்றதாகி விட்டது.  இதனைக் கருத்திற் கொண்டு தொலைதூர  கல்வி முறைமையின் ஊடாக பாடசாலை கற்றல் நடவடிக்கையை எதிர்வரும் 3 வாரங்களுக்கு  முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தரம் 3 தொடக்கம் 13 ஆம் தர மாணவர்களுக்கு  தமிழ், சிங்கள் மற்றும் ஆங்கில மொழி ஊடாக கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து ஒழிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக  2700 கல்வி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page