அக்குறணை பிரதேச சபை – 2021 வழங்குனர், ஒப்பந்தக்காரர் பதிவு செய்தல்

2021ஆம் வருடத்திற்காக வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரார்களைப் பதிவு செய்தல் அக்குறணை பிரதேச சபை

2021ஆம் வருடத்தினுள் பின்வரும் குறிப்பிடப்படும் வழங்கல்கள் மற்றும் சேவைகளை நிறைவேற்றுவதற்கு விரும்பும் வழங்குநர்களைப் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஒரு விண்ணப்பத்திற்காக 1500.00 ரூபா தொகை அறவிடப்படுவதுடன் தம்மால் சுயமாகத் தயாரித்துக்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பங்களை தலைவர், அக்குறணை பிரதேச சபை, அலவத்துகொட என்ற முகவரிக்கு 2020.12.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன் பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும் அல்லது நேரில் கொண்டுவந்து ஒப்படைத்தல் வேண்டும். விண்ணப்பங்களைத் தாங்கி வரும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘வழங்குநர்களைப் பதிவு செய்தல் 2021’ என்று குறிப்பிடுதல் வேண்டும்.

சகல காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகளிலும் செயலாளர், அக்குறணை பிரதேச சபை, அலவத்துகொட எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதி மற்றும் உங்களால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் ஆளடையாளம் பற்றிய ஏனைய ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

உங்களிடம் பொருட்கள் மற்றும் சேவைகளை கோரும்போது விலைமனுக்களைச் சமர்ப்பிக்காத, கட்டளை வழங்கப்படும் போது வழங்கல்களை மேற்கொள்ளாத, குறித்த நேரத்திற்கு மற்றும் குறித்த தரத்திற்கு அமையாத வழங்குநர்கள் அபகீர்த்தியானோர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.

பதிவு செய்துள்ள வழங்குநர்களின் பட்டியலிலிருந்தே விலைகளைக்; கோரி குறித்த பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் தேவைப்பாட்டின் பிரகாரம்; அதற்கு புறம்பாலும் விலைகளைக் கோரி, சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையை சபை தன்னகத்தே கொண்டுள்ளது.

Read:  பேராசிரியர்‌ கலாநிதி S.M.M மஸாஹீருக்கு பாராட்டும்‌ கெளரவமும்‌

சகல வழங்கல்கள் மற்றும் சேவைகளின் விலைமனுக்களும் 06 மாத காலம் செல்லுபடியாதல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு 066-2244387 என்ற தொலைபேசி இலக்கத்தில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்து அறியலாம்

தொடர் இல / வழங்கல் விபரம்

01 சகல அலுவலக காகிதாதிகள்

02 அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள், உருக்கு தளபாடங்கள்

03 கணனி, புகைப்படப் பிரதி இயந்திரங்கள், அச்சுப்பொறிகள், தொலைநகல், கைவிரல் ரேகை பதிவு இயந்திரம், டுப்ளோ இயந்திரம், சகல டோனர் வகைகள் மற்றும் கணனி துணைப்பாகங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள்

04 வீதி விளக்கு உபகரணங்கள் மற்றும் அலுவலக மின் உபகரணங்கள்

05 விளையாட்டுப் பொருட்கள்

06 சீருடைகள், திரைச்சீலைகள், மேசைத் துணிகள், பாதணிகள், காலுறைகள், அலுவலக பைகள், உத்தியோகபூர்வ இலச்சினைகள்

07 நிர்மாண இயந்திர உபகரணங்கள்

08 நிர்மாணப் பொருட்கள் (சீமெந்து, கருங்கல், மணல், செங்கல், கூரைத்தகடு, சிறுகல், நிறப்பூச்சுகள், குழாய்கள்;, ஜீ.ஐ. குழாய்கள், இரும்பு போன்றன) பிவிசி நீர்க்குழாய் மற்றும் துணைப்பாகங்கள்;, சகல வகையான கொங்கிறீட் உற்பத்திகள் (ஹியூம் குழாய்கள்;, கம்பித்தூண், புளொக்கல், தரையில் பதிக்கும் கற்கள்)

09 வாகன உதிரிப்பாகங்கள் (டயர், டியூப், பெற்றரி, எண்ணெய், வகைகள், ஏனைய உதிரிப்பாகங்கள், மீட்டர்)

10 சுகாதார மற்றும் துப்புரவேற்பாட்டு சேவைகளுக்கு தேவையான பொருட்கள் (தும்புத்தடி, விளக்குமாறு, தூரிகை, சவர்க்காரம், கையுறை, கிருமிநாசினி, மழை அங்கி, கம்பூட்ஸ், வாய்க் கவசம் போன்றன)

11 வாகனங்களை செர்விஸ் செய்தல்

12 வீதிப்பராமரிப்பு மற்றும் வேலைத்தள உபகரணங்கள் (மண்வெட்டி, சவல், ரேக்கை, கத்தி, அளவை பட்டி போன்றன)

Read:  பேராசிரியர்‌ கலாநிதி S.M.M மஸாஹீருக்கு பாராட்டும்‌ கெளரவமும்‌

13 ஆயுர்வேத ஔடதங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

14 தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துணைப்பாகங்கள், உபகரணங்கள் சேவைகள்

15 வாகன இயந்திராதிகளை வாடகைக்கு வழங்குதல்

16 அச்சு வேலைகள் (புத்தகம், ஆவணங்கள், படிவங்கள், பில் புத்தகங்கள், சுவரொட்டிகள், அலுவலக அடையாள அட்டைகள்)

17 பட்டறை வேலைகள்

18 நில அளவை, சட்டம் மற்றும் ஆலோசனை சேவைகள்

19 சிங்கள, ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புச் சேவைகள்

20 அலுவலக உபகரணங்களின் திருத்தவேலைகள்

21 கணனி, அச்சுப்பொறி, தொலைநகல், புகைப்படப்பிரதி இயந்திர திருத்தவேலைகள்

22 உருக்கியொட்டும் வேலைகள், மேசன் வேலைகள், நீர்க்குழாய், பட்டறை சேவைகள், தொழில்நுட்ப சேவைகள், உள்ளக தொலைபேசி சேவைகள்

23 வாகன திருத்தவேலைகள், கடைசல் இயந்திர வேலைகள், வாகன சேவைகள் வழங்குதல்

24 உத்தியோகபூர்வ முத்திரை, திகதி முத்திரை, நினைவுப் படிகம் தயாரித்தல், டிஜிட்டல் அறிவித்தல் அச்சிடல் மற்றும் பொருத்துதல்

25 அபாயகரமான மரங்கள் வெட்டுதல்

26 ஒப்பந்தக்காரர்களுக்கு:

  1. 50000.00 ரூபா வரை ரூபா 1000.00
  2. 50,001.00 முதல் 100,000.00 ரூபா வரை ரூபா 1250.00
  3. 100,001.00 முதல் 500,000.00 ரூபா வரை ரூபா 1500.00
  4. 500,001.00 முதல் 1,000,000.00 ரூபா வரை ரூபா 2500.00
  5. 1,000,000.00 முதல் 2,000,000.00 ரூபா வரை ரூபா 5000.00
  6. 2,000.000.00 ரூபாவுக்கு மேல் ரூபா 7500.00

ஐ. எம். இஸ்திஹார்
தலைவர்
அக்குறணை பிரதேச சபை
அலவத்துகொடை.