அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோய் பிடென் தெரிவு.

அமெரிக்காவின் 46-வது புதிய அதிபராக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3-ஆம் திகதி அமெரிக்க அதிபருக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு முடிந்தவுடனே உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தது.

அதில் ஆரம்பத்தில் இருந்தே, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார். இருப்பினும் டிரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு இடையே கடந்த மூன்று நாட்களாக இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், ஜோ பைடன் தற்போது 284 வாக்குகள் பெற்றுள்ளதாகவும், இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் வெறும் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப எலக்ட்ரோல் காலேஜ் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் தேர்வுக் குழுவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவில் 538 வாக்காளர் குழு இருக்கிறார்கள். இதில் 270 வாக்காளர் குழுவின் வாக்குகளைப் பெறுபவர்கள் அதிபர் தேர்தலில் வெல்ல முடியும். அதன் படி பார்த்தால், இப்போதே ஜோ பைடன் 280 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதால், அவர் வெற்றி பெற்றுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, பென்சில்வேனியா மாகாணத்தில், 20 வாக்குகளைப் பெற்ற பின்னரே இது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.