கொழும்பில் கொரோனாவால் 23 வயதுடைய இளைஞன் பலி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (5)இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price