கொவிட் -19 தொற்று கர்ப்பிணிக்கு சிசேரியன்: குழந்தைக்கு தொற்றில்லை!

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய் ஒருவர், சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மாருக்கு சிகிச்சையளிக்கவென விசேட ஏற்பாடுகளைக் கொண்ட கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் (முல்லேரியா) மேற்கொள்ளப்பட்ட விசேட சிஷேரியன் சத்திர சிகிச்சையின்போதே இந்த ஆரோக்கியமான, கொவிட் தொற்று அற்ற குழந்தையை அந்த தாய் பிரசவித்துள்ளதாக கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் மயூரமான தெவோலகே தெரிவித்தார்.

இந்த சிசேரியன் சத்திர சிகிச்சையானது குறித்த தாய்க்கு முன்னெடுக்கப்பட்ட 3 ஆவது சிசேரியன் சத்திர சிகிச்சை என கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவுக்கு பொறுப்பான பிரசவ மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் மயூரமான தெவோலகே குறிப்பிட்டார்.

சிறுவர் நோய்கள் குறித்த விசேட வைத்திய நிபுணர் தர்ஷிகா ரணசிங்க, மயக்க மருந்து தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் பிரியந்தி பலிஹவடன உள்ளிட்ட குழுவினரும் இந்த சத்திர சிகிச்சையில் பங்கேற்றுள்ளனர்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price