அடக்கம் செய்ய அனுமதி வழங்க, துரித நடவடிக்கை அவசியம் – ஹக்கீம்

கோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர்,

அவசரப்படாமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய காலம் இது.

இடர் முகாமைத்துவ தேசிய கவுன்சிலை உடனடியாக அமைத்து எதிரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

நாடு பாரிய அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இறந்தவர்களை அடக்குவது தொடர்பான பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக வளர்ந்துள்ளது.முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி கத்தோலிக்க மக்களுக்கும் இது தொடர்பில் பிரச்சினை உள்ளது.இதிலுள்ள விஞ்ஞானபூர்வமான அடிப்படையை உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அமைச்சர் அலி சப்ரி எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் அதற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பற்றி எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page