சீனாவும் முஸ்லிம்களும் , பயண அனுபவம்.

சீனாவில் முஸ்லிம்கள் வதைக்கப்படுகிறார்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறேன் மீடியாக்களில் செய்திகளாகக் கேள்விப்பட்டு வேதனைப்பட்டிருக்கிறேன். முஸ்லிம்கள் நோன்பு நோற்கத்தடை என்றெல்லாம் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

இம்முறை சீனாவிற்குச் செல்லும்போது இவைகளை நேரிலே பார்க்க வேண்டும் என்றதொரு நோக்கில் பள்ளிவாசல் ஏதும் இருக்குமா என்று தேடிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த ஹீபிஎன்ற நகரத்தில் பள்ளியை தேடினேன் என்னோடு எனக்கு வழிகாட்டியாக வந்தவரிடம் கேட்டேன் அவருக்கும் தெரியவில்லை ஏனென்றால் இவர்கள் மற்றவர்களின் பள்ளிகள் எங்கு இருக்கின்றது மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் மற்ற மதத்தவர் என்ன உடை அணிகிறார்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை.

ஒருவாறு அவர் இன்டர்நெட்டின் மூலம் ஒரு பள்ளிவாசல் இருப்பதாகத் தகவல் அறிந்து என்னை அந்த பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் நான் அயர்ந்து போனேன் ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் அங்கு ஒரு பெரிய பள்ளி அமைந்திருந்தது அதுவும் மிகவும் நெருக்கமான பிசியான வியாபார கடைகளுக்கு இடையில் அமைந்திருந்தது அதனோடு ஒட்டி நிறைய கடைத் தொகுதிகள் இருந்தன.

ஒருவாறு மிகவும் தயக்கத்துடன் உள்ளே சென்றேன் உள்ளே சென்றபோது அங்குள்ள பள்ளி கட்டடங்களை பார்த்தபோது இன்னும் ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் சீனாவில் பள்ளிகள் கட்டுவதற்கு தடை இருந்த பழைய பள்ளியைக் கூட திருத்துவதற்குதடை என்று செய்திகள் கேள்விப்பட்டிருக்கின்றேன்

அங்குள்ள இமாமைச் சந்தித்தேன்.அவர் 26 வயது நிறைந்த சீன இனத்தைச் சேர்ந்தவர்.அவரிடம் பல கேள்விகள் கேட்டான் இந்த பள்ளி கட்டப்பட்ட ஆண்டைவிசாரித்தபோது அவர் சொன்னார்1956ம் ஆண்டு கட்டப்பட்டது. 2009ம் ஆண்டு புணர்நிர்மாணம் செய்யப்பட்டு தொழுகை வசதிகள்விரிவாக்கப்பட்டன என்று இமாம் அஹ்மத் அப்துல்லாஹ் கூறியதைக் கேட்டவுடன் இன்னும் ஆச்சரியமாக இருந்தது ஏனெனில் சீனாவில் புதிதாக பள்ளிகள் கட்ட முடியாது பழைய பள்ளிகளில் எதுவமாற்றங்களும் செய்ய முடியாது என்று தான் நான் மீடியாக்கள் மூலம் அறிந்திக்கிறேன். ஆனால் உண்மை அப்படியல்ல என்பதனை இப்போது உணர்ந்து கொண்டேன். தொடர்ந்து பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். நீங்கள் எந்த நாட்டில் இஸ்லாம் அரபு படித்து இமாமாக கடமை புரிகிறீர்கள் என்ற எனது கேள்விக்கு அவர் பீஜிங் நகரத்தில் உள்ள மத்ரஸாவிலே தான் நான் படித்தேன் என்ற அவரது பதில் என்னை மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. உண்மையாக வா உண்மையாக வா என்று கேட்குமளவுக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஏனெனில் எமக்குக் கிடைத்த தகவல்படி இது ஒரு கம்யூனிஸ நாடு முஸ்லிம்கள் தங்களது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற முடியாது என்பதுதான் ஆனால் உண்மை அதுவல்ல என்பதை தற்போது உணர்ந்துகொண்டேன்.

சிங்சியாங் மாகாணத்தில் உள்ள உய்குர்முஸ்லிம்கள் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர் பதிலளிக்க முன்னர் எனக்கு அருகில் நெருங்கி வந்து தனது குரலைத்தாழ்த்தி அவர்கள் அரசுடன் சவால் விடுபவர்கள் தங்களது மாநிலத்திற்கு தனியான ஆட்சுரிமை வேண்டும் என்று போராடுபவர்கள் என்று கூறினார். அவர்களால்சீன மொழியைப் பேச முடியாது.

இவர்களை சீன பெரும்பாண்மையினரின் வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைக்க எத்தனையோ முயற்சிகள் சீன அரசால் மேற்கொள்ளப்பட்டும் கூட அவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை அதனால் தான் அவர்கள் பலாத்காரமாக சீன மொழியைக் கற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பகிறார்கள் என்று பல தகவல்களை வழங்கியவர் நான் மிகவும் ஆர்வமாக தொடர்ந்தும் அவரது பேச்சை கேட்க்கொண்டிருப்பதை அவதானித்த இமாம் தங்களது மத சுதந்திரத்தைப் பற்றி மிகவும் சதோஷமாக பல விடயங்களையும் கூறினார்.

அது மட்டுமல்ல பள்ளிக்கு முன்னால் இருக்கின்ற கடைத்தொகுதிகள் எல்லாம் பள்ளிக்கும் சொந்தமானது என்ற தகவல் இன்றும் எனக்கு வியப்புக்குரிய தகவலாகவே இருந்தது.

நீங்கள் முஸ்லிம்கள் எமது நாட்டு மொழியைப் பேசுபவர்கள் அல்ல நீங்கள் எங்கள் நாட்டை விட் டு வெளியேறுகள் என்று எமது நாட்டிலே நடக்கும் கொடுமையை விட சீன அரசு எவ்வளவு மேலானது என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த புதிய தகவல்கள் இவற்றை இன்னும் ஆராய வேண்டும் என்றதொரு ஆர்வத்தைத் தந்தது. தொடந்து பல தகவல்களைப் பெறலாம் என்ற நோக்கில் பள்ளிக்கடைகளில் ஒன்றில் பேக்கரி நடத்தும் சீன முஸ்லிம் போல் காட்சியளித்த நபரை நெருங்கி ஸலாம் சொன்னேன் அழகாகப் பதில் சொன்னார் என்னோ வெந்த சீன வழிகாட்டியிடம் இவரைப் பற்றி கேளுங்கள் என்று கூறி அவரது தகவலை ஆவலுடன் கேட்டேன்.அங்கும் இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த நபர் பெரும்பான்மை சீன இனத்தவர் அல்ல. அவர் உய்குர் இனத்தைச் சேர்ந்த சிங்சியாங் மாகாணத்திலித்து வந்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் ஹூபிக்கு வந்து குடியேறி வியாபாரம் செய்கிறார். தங்களது மாகாணம் மிகவும் அமைதியானது அழகானது பாதுகாப்பானது என்றார். நீங்கள் இங்கு வருவதற்கு வியாபாரம் செய்வதற்கு ஏதாவது சவாலை எதிர்நோக்கினீர்களா என்று வினவியதற்கு இல்லவே இல்லை என்ற தொனியில் பதிலளித்தார்.

அருகில் உள்ள ஹலால் உணவகத்திற்கு சென்றேன் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் சீருடை இன்னுமொரு ஆச்சரியத்தைத் தந்தது. ஊழியர்கள் தொப்பியணிந்தும் ஸ்காப் f அணிந்தும் காணப்பட்டது மத சுதந்திரத்திற்கு அப்பால் தமது கலாசாரத்தைப் பின்பற்றவும் இவர்கள்பூரண சுதந்திரத்தை. பெற்றுள்ளார்கள் என்பதனைச் சுட்டிக் காட்டியது.

இவைகளை அவதானித்தபோது நமது நாட்டில் அண்மையில் பௌத்த துறவி ஒருவர் நாங்கள் பெளத்த நாடான சீனாவிற்குங்களது மக்களை வேலைக்கு அனுப்புவோம் என்று கல்முனையில் வைத்து கூறிய வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.

என்னோடு வந்த முஸ்லிம் அல்லாத வழிகாட்டியிடம் நீங்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரா? நான் இதுவரை ஒரு பன்சலையையும் காணவில்லையே என்று கேட்டேன் அதற்கு அவர். இந்த நாடு பௌத்த நாடு என்று அழைக்கப் படுவதில்லை. எங்களிடம் எதுவிதமான மத நம்பிக்கையும் இல்லை எங்களது மூதாதைகள் பௌத்தர்களாக இருந்தார்கள் ஆனால் இளம் சந்ததியினர் மதத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றார்.

வீதிகளில் எந்தவொரு பெளத்த துறவிகளையும் காணவில்லையே என்று வினவிய போது பின்வருமாறு அவர் கூறினார்” பௌத்த தேவாலயங்களை எல்லா இடங்களிலும் காண முடியாது மலைப்பாங்கான இடங்களில் மாத்திரம்தான் தேவாலயங்கள் உள்ளன பௌத்த துறவிகள் அங்கே தான் தியானத்தில் ஈடுபடுவார்கள்.அவர்கள் வெளியேவரமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் உலகத்தைத் துறந்த துறவிகள் அன்பு கருணை மன்னிப்பு போன்றவைகளைப் போதித்துக் கொண்டு தேவாலயங்களிலேயே தங்குவார்கள்”.

கேட்டவுடன் என்னை அறியாமலே பின்வருமாறு என் நாவு என்னை முந்திக்கொண்டு கூறியது “எங்கள் நாட்டில் பௌத்த தேவாலயங்களை பிசியான நகரங்களிலும் காணலாம். துறவிகள் அன்பு கருணை மன்னிப்பு என்பதனைப் போதிப்பது ஒரு புறமிருக்க பகிரங்கமாக துவேசத்தைவிதைக்கிறார்கள் . பாராளுமன்றத்தில் கூட அங்கத்தும் வகிக்கிறார்கள் என்று சொன்னவுடன் அவர் சொன்னார் அப்படியென்றால் அவர்கள் உண்மையான துறவிகள் அல்ல.
அவர்கள் பிரக்டீஸ் பண்ணுவது பௌத்தமும் அல்ல.

இதனைக் கேட்டவுடன் நமது நாடு ஏன் இப்படியான பௌத்தத்தை பிரக்டீஸ் பண்றும் துறவிகளை உள்ளடக்கவில்லை அல்லது அவர்களின் பௌத்த பிரக்டீஸ் ஏன் ரியலாக இருக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

—————————————————————
இவைகள் எனது பயனஅனுவங்கள்.நான் சந்தித்தவர்கள் பெற்ற தகவல்கள் முழு சீனாவையும் பிரதிபலிக்கும் என்று நினைக்கவில்லை. இது ஆழமானதொருஆய்வு அல்ல.
—————————————————————
Dr Seyed Aroos Sheriffdeen.

Previous articleமுஸ்லிம் தலைமைகளின் இரா­ஜி­னாமா நாடகம்: அர­சியல் இரா­ஜ­தந்­தி­ர­த்தின் உச்சம்
Next articleஅகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா விடுக்கும்‌ ஹஜ்ஜுப்‌ பெருநாள்‌ வாழ்த்து