வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள செய்தி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த பணியாளர்களுக்காக அலுவலக காப்புறுதி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு 5 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ள 2019 உடன்படிக்கைக்கு அமைவாக அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டுள்ளபோது இடம்பெறும் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் இழப்பீடான 5 இலட்சம் ரூபா தொகையை கொவிட் 19 நோய்த் தொற்றினால் உயிரிழந்த பணியாளர்களுக்காக செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  மீண்டும் ரணில் !!