கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் பலி, முழு விபரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் விபரம் கீழ்வருமாறு,

1. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர். (பிம்புற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவர் ஒரு சிறுநீரக நோயாளி என தெரிவிக்கப்படுகிறது.)

2. வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர். (கொழும்பு தேசிய மருத்துவமனையில் மார்பு வலி காரணமாக காலமானார்.)

3. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர். (மாரடைப்பு காரணமாக மரணம்)

4. கொழும்பு 14 சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர். (சுவாச பிரச்சினைகள் காரணமாக வீட்டில் காலமானார்.)

5. கொழும்பு 15 சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர். (இதய பிரச்சினைகள் காரணமாக மரணம்)

Previous articleமின்சாரத்தையும், குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
Next articleஇன்றைய தங்க விலை (05 -11-2020) வியாழக்கிழமை