தேசிய வைத்தியசாலையில் PCR பரிசோதனை – ரவி குமுதேசின் பரபரப்புக் குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பின்னர்,  இதுவரை பலியான 10 பேரில் 6 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்திருப்பதாகவும் இதற்கு காரணம், மேற்படி வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாமையே என, அரச மருத்துவ ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்  ரவி குமுதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மருத்துவ ஆராய்ச்சி  நிலையத்தால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் அதன் பெறுபேறு தாமதாக கிடைப்பதால் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உயிர்களை பாதுகாப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளா

SOURCE ஜப்னா முஸ்லிம்
Previous articleஅக்குறணை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
Next articleஅவசர அறிவித்தல் – பள்ளிவாசல்களில் பேணப்பட வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகள்