தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

கொரோனா தொற்று நிறைவுக்கு கொண்டு வரப்படும் வரை, தனியார் பேரூந்து சேவை கட்டணங்களை ஒன்றரை மடங்காகவும் குறைந்த பேரூந்து கட்டணத்தை 20 ரூபாய் வரை தற்காலிகமாக அதிகரிக்க வேண்டுமென, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பேரூந்து கட்டணத் திருத்தம் மற்றும் கொரோனா பரவல் காலத்தில் பேரூந்து துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் அடங்கிய யோசனையானது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்