கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் – பவித்ரா

கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதன் அச்சுறுத்தல் இருக்கும் எனவும் வைரஸ் பரவ அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.