கொரோனாவினால் 20 ஆவது மரணம் – ஜனாஸாவை தகனம் செய்ய நடவடிக்கை

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும் 54 வயதுடைய இவர்,  கொழும்பு 12,  வாழைத் தோட்டத்தைச் சேர்ந்தவரெனவும், அதன் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வசிப்பவரெனவும், முன்னாள் மேல் மாகாண அளுநர் ஆசாத் சாலி மற்றும் நவமணி பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோர் உறுதிப்படுத்தினர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து,  மேலான சுவனத்தை கொடுத்தருள்வாயாக. அவரின் குடும்பத்தினருக்கு மன தைரியத்தையும் ஆறுதலையும் வழங்கிடுவாயாக. ஆமீன்…

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்
SOURCEஜப்னா முஸ்லிம்