அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று. 1000 பேர் பலி.

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 91,000 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரேநாளில் 1000 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த மாதத்துக்குள் ஒரேநாளில் 1000 பேர் கொரோனாவுக்கு காவுகொள்ளப்பட்ட 3வது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கின்படி, அமெரிக்காவில் மொத்தம் 90லட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் சுமார் 21 மாகாணங்கள் கொரோனா பரவலுக்கு உள்ளாகியுள்ளன. சில மாகாணங்களில் இது கடுமையான நிலையை எட்டியிருக்கிறது.

இந்தநிலையில் கொரோனா தொற்று 2020 ஜனாதிபதி தேர்தலை தீர்மானிப்பதில் முக்கியமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது வௌியே செல்ல அனுமதி உள்ளவர்கள்
Next articleஅக்குறணையில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி