மாவனல்லை ஹிங்குலோயா பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சம் தொடர்பில்

மாவனல்லை ஹிங்குலோயா பிரதேசத்தில் முஸ்லிம் வைத்திய குடும்பத்தினர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார்கள் அவர் கேகாலை வைத்தியசாலையில் கடமைபுரிபவராவார்.

அதன் பின்னர் அவர்களோடு தொடர்புபட்ட சிலர் தனிமைபடுத்தப்பட்டனர். அத்தோடு ஹிங்குலோயா பிரதேசத்தை சேர்ந்த மீன் வியாபரி ஒருவரும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு பிரதேசத்திற்கு சென்று மீன் கொள்வனவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவரும் இவருடைய குடும்பத்தினரும் மக்களுடன் நெருங்கிப்பழகி இருப்பதாகவும் இவர்களிடம் ஊர் மக்கள் மீன் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக கூடுதலான மக்கள் பாதிக்கப்படலாம் என அச்சம் தெறிவிக்கப்பட்டுள்ளதுடன்  ஊர் மக்கள் மிக்க அவதானத்துடன் நடந்துகொள்ளும்படியும் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளும்படியும்

 தேவைப்படின் ஸமிதிய வீதி, முருதவல, ஓவத்த, புலுப்பிடி, மாராவ, ஸாஹிராவீதி, கல்கந்த, ஹிங்குலோயா போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

VIAமடவளநியூஸ்
SOURCE IQBAL HINGULOYA