இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணங்கள் சற்றுமுன் பதிவாகின, மொத்தம் 3.

இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணங்கள் சற்றுமுன் பதிவாகி உளளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து இலங்கையில் இன்றைய தினம் மொத்தமாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது .  

இதில் ஒருவர் 19 வயதுடைய இளைஞர் எனவும், மற்றவர் 75 வயதுடைய நபர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.  

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு வாழைத்தோட்டம் மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

இத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.  

இன்றைய தினம் ஏற்கனவே 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available