கொரோனா நோயளர்களுக்காக கம்பஹாவில் இரு புதிய வைத்தியசாலைகள் நிர்மாணம்

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்க கம்பஹா மாவட்டத்தில் இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிகாரா எபா தெரிவித்துள்ளார்.

வாதுபிட்டிவாலாவில் அமைந்துள்ள இளைஞர் மன்றம், கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அருகில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலைகளின் கட்டுமானப் பணிகள் இலங்கை இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த வைத்தியசாலைகளின் கட்டுமானத்தை விரைவில் முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.