நாரஹேன்பிட்டி, வெரஹேகர மோட்டார் போக்குவரத் திணைக்கள அலுவலகங்களுக்கு பூட்டு

நாரஹேன்பிட்டி, வெரஹேகர மோட்டார் போக்குவரத்J திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர அலுவலகங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் திறக்கபடமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொழும்புக்கு வரும் அனைத்து தூர இடங்களுக்கான போக்குவரத்து பஸ் சேவைகள் பலவற்றை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்றைய தங்க விலை (26-10-2020) திங்கட்கிழமை
Next article20 தொடர்பில் முஸ்லீம் காங்கிரஸ் செய்த, உடன்படிக்கை என்ன? பகிரங்கப்படுத்த ஐதேக கோரிக்கை